மாநிலங்கள்

img

பாலகோட் தாக்குதலா..? எனக்கு ஒன்றும் தெரியாது

குர்தாஸ்பூர்:

மக்களவைத் தேர்தலில், மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அருண் ஜெட்லி, உமாபாரதி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்காத பாஜக, மாறாக, நடிகர் - நடிகைகளைத் தேடிப்பிடித்து வேட்பாளர்கள் ஆக்கியுள்ளது.அந்த வகையில், 62 வயதான பாலிவுட் நடிகர் சன்னி தியோலை, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் இறக்கி விட்டுள்ளது. பாஜகவில் சேர்ந்த மறுநாளே அவருக்கு எம்.பி. சீட் வழங்கப்பட்டது.


இந்நிலையில், சன்னி தியோலைப் பேட்டி கண்ட செய்தியாளர்கள், பாகிஸ்தான் - இந்தியா இடையிலான விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக, பாஜகவினர் பெருமை பீற்றும் பாலகோட் விமானப்படைத் தாக்குதல் குறித்தும் கேட்டுள்ளனர்.


இதனைச் சற்றும் எதிர்பார்க்காத சன்னி தியோல், என்ன பதில் சொல்வது என்று திக்குமுக்காடியுள்ளார். “நான் மக்களுக்கு சேவையாற்ற இங்கு வந்துள்ளேன். நான் வெற்றி பெற்றால், இது குறித்தெல்லாம் பதில் கூறலாம். ஆனால், இப்போதைக்கு எந்தவித கருத்தும் சொல்ல மாட்டேன்” என்று தப்பித்து ஓடியுள்ளார்.‘நான் அரசியலுக்குப் புதியவன். எனக்கு பாலகோட் தாக்குதல் பற்றியோ, இந்தியா - பாகிஸ்தான் உறவு பற்றியோ அதிகம் தெரியாது என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார்.


;