மாநிலங்கள்

img

ஈஸ்வரசந்திர வித்யாசாகர் சிலை மீது பாஜக கும்பலுக்கு அப்படி என்ன கோபம்...?


ஈஸ்வரசந்திர வித்யாசாகர் மேல அப்படி என்ன அமித் ஷா - பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எரிச்சல்? அவரது சிலையை உடைத்து, அவர் பெயரிலான கல்லூரியைத் தாக்கி.... வெறியாட்டம் ஆடி இருக்கிறார்கள்!

அவர் ஒன்றும் இந்துமத எதிர்ப்பாளர் இல்லை. காந்தி மாதிரி இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காகச் செத்தவரும் இல்லை.

ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர். சமஸ்கிருத அறிஞர். உடன்கட்டை ஏறுதலை ஒழித்தவர் எனப் பெயர் கூறப்படும் ராஜாராம் மோகன் ராய்க்கு அப்புறம் வந்தவர்.

அவர் மீது இந்த க் கும்பலுக்கு அப்படி என்ன காண்டு?

அவர் பார்ப்பனர்கள் மத்தியில் சில சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறார். விதவை மறுமணத் தடையை எதிர்த்து பிரச்சாரம் செய்திருக்கிறார். பார்ப்பனர்கள அதை எதிர்த்துள்ளனர். டல்ஹௌசி நேரடியாக அந்தப் பிரச்சினையை எடுத்துக்கொண்டு விதவா விவாகச் சட்டத்தை நிறைவேற்றினார்.

அந்தக் காலத்தில் வங்கப் பார்ப்பனர்கள் தம் பெண்களை அவர்கள் பருவம் எய்துவதற்கு முன் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அதற்காக பருவம் எய்தாத பார்ப்பனச் சிறுமிகளை மரணப் படுக்கையில் கிடக்கும் கிழப் பார்ப்பனர்களுக்கும் கூடக் கட்டிக் கொடுக்கும்ம் பழக்கம் இருந்தது. அந்தக் கிழவர் செத்த பின் அந்த இளம் பார்ப்பனப் பெண்கள் தம் ஆயுசு முழுக்கவும் மொட்டைப் அடித்துக் கொண்டு, வெள்ளுடை உடுத்தி, நல்ல சோறு சாப்பிடாமல் வாழ்ந்து சாக வேண்டும். அப்படியான விதவைப் பார்ப்பனச் சிறுமிகளை அடைத்து வைக்கும் மடங்கள் இருந்துள்ளன.

இதை எல்லாம் முடிவுக்குக் கொண்டு வந்த ஒரு அறிஞராக வித்யா சாகர் - அறிவுக் கடல் - ஆக இருந்ததாகக் கருதப்படும் அவரை வேதகாலக் காட்டுமிராண்டிக் காலத்தைப் பொற்காலமாகக் கொண்டாடும் கும்பல் வேறெப்படிக் கையாளும்?

கடைசி காலத்தில் ஜார்கண்டில் உள்ள சந்தால் பழங்குடி மக்கள் பகுதியில் சென்று வசித்தார் என்கிறார்களே. ஒருவேளை அதற்கான எரிச்சலோ?

வித்யா சாகர் சிலைக்கு இந்துத்துவா கும்பல் செய்துள்ள இழிவை வேறெப்படி விளங்கிக் கொள்வது!

Marx Anthonisamy

;