மாநிலங்கள்

img

இரண்டு ஆடுகளை கைது செய்த தெலுங்கானா காவல்துறை!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹுஸுராபாதில், மரக்கன்றுகளை தின்ற குற்றத்துக்காக இரண்டு ஆடுகளை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.

'சேவ் த ட்ரீஸ்' என்ற தொண்டு நிறுவனம், நகரம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வருகிறது. அந்த அமைப்பின் சார்பாக, சமீபத்தில்  ஹுஸுராபாத் நகர் முழுவதும் 900 மரக்கன்றுகளை நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 900 மரக்கன்றுகளில் சுமார் 250 மரக்கன்றுகளை இரண்டு ஆடுகள் தின்றுவிட்டதாக அந்த அமைப்பைச் சேர்ந்த அனில் மற்றும் விக்ராந்த் ஆகியோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதை அடுத்து, புகாரை விசாரிக்க போலீசார் சென்றபோது, அப்போதும் ஆடுகள் இரண்டும் சேர்ந்து மரக்கன்றுகளைத் தின்று கொண்டிருந்தன. இந்நிலையில் அவற்றைக் கைது செய்து, காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதை தொடர்ந்து, ஆடுகளின் உரிமையாளருக்கு தகவல் அளிக்கப்பட்டு, ஆடுகளுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், உரிமையாளர் அபராத பணம் செலுத்திய பின்னரே, இரு ஆடுகளும் விடுவிக்கப்பட்டன. 
 

;