மாநிலங்கள்

img

பாஜக முன்னாள் எம்.பி. காங்கிரசுக்கு தாவினார்

புதுதில்லி:

சுரேஷ் சண்டேல் என்ற பாஜக-வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளார்.

இமாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் சண்டேல், 1998, 1999 மற்றும் 2004 ஆகிய மூன்றுமுறை பாஜக எம்.பி.யாக இருந்தவர் ஆவார். 1988 முதல் 1998 வரை பாஜக-வின் மாநில பொதுச்செயலாளராகவும், 1998 முதல் 2000 வரை, பாஜக-வின் மாநிலத் தலைவராகவும் இருந்துள்ளார்.

தற்போது பாஜக-வின் விவசாயிகள் பிரிவு துணைத் தலைவராகவும், வேளாண் ஆராய்ச்சி கழக நிர்வாக உறுப்பினராகவும் இருந்து வந்தார்.இந்நிலையிலேயே அவர், திங்கட்கிழமையன்று ராகுல் காந்தியைச் சந்தித்து, காங்கிரசில் இணைந்துள்ளார்.


;