மாநிலங்கள்

img

பிப்.21 பல்கலை., கல்லூரிகளில் தாய்மொழி தின விழா யுஜிசி அறிவிப்பு

புதுதில்லி, பிப்.15-  சர்வதேச தாய்மொழி தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்கலைக் கழக மானியக்குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்படும் பிப்ர வரி 21 ஆம் தேதியன்று பல்வேறு மொழிகளின் சிறப்பை மாண வர்களுக்கு எடுத்துரைக்க வேண் டும்.  பிற இந்திய மொழிகளை கற்றுக் கொள்ள மாணவர்களை ஊக்கு விக்கவும் மொழிசார்ந்த கலை நிகழ்ச்சிகள், விவாதங்கள், போட்டி கள் மற்றும் கண்காட்சிகளை நடத்த வேண்டும். இது தொடர்பான அறிக்கையை யுஜிசி இணையதளத்தில் பதி வேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

;