மாநிலங்கள்

img

தஞ்சையில் பாதாளச் சாக்கடை பணிக்கு ‘ரோபோ’

தஞ்சாவூர் அக்.8- தஞ்சாவூரில், பாதாளச் சாக்கடை யில் ஏற்படும் அடைப்பினை அகற்ற எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பாக மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட பண்டிக்கூட் எனும் ரோபோவை ஆட்சியர் ஆ.அண்ணா துரை அண்மையில் தொடங்கி வை த்தார். பின்னர் அவர் பேசியதாவது:-  எண்ணெய் மற்றும் இயற்கை எரி வாயுக் கழகம் சார்பில் தஞ்சாவூர் மாநகராட்சி பகுதி பாதாளச் சாக்கடை யில் ஏற்படும் அடைப்பை அகற்றிட ரூ.48.40 இலட்சம் மதிப்பீட்டில் பண்டிக்கூட் எனப்படும் ரோபோ இயந்திர கருவி வழங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் துப்புரவு பணி யாளர்கள் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி அடைப்புகளை சரி செய்வது தவிர்க்கப்படுவதால், விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படாது. இது மாநகராட்சியில் ஒரு புதிய சாதனையாகும். பண்டிக்கூட் ரோபோ  பயன்பாட்டின் மூலம் மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை இணைப்பு பெற்று ள்ள சுமார் 23,653 குடும்பத்தினர் பயன் பெறுவர்” என்றார்.  நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், எண்ணெய் மற்றும் இயற்கை எரி வாயு கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனுராக் ஷர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.    (ந.நி.)

;