மாநிலங்கள்

img

சீன ஜனாதிபதி வருகை: தமிழர்களுக்கு பெருமை

புதுச்சேரி, அக்.9- சீன ஜனாதிபதி வருகை தமிழர்களுக்கு பெருமிதம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி கூறினார். புதுச்சேரி காம ராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மதச் சார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சிகளின் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புள்ளது” என்றார். இத்தொகுதியில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம் எம்.பி., கூட்டணி கட்சி தலைவர்கள் என அனைவரும் வீடு, வீடாகச் சென்று வாக்கு  சேகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய பாஜக  அரசு புதுச்சேரி அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை துணை நிலை ஆளுநர் மூலம் கொடுத்து வருகிறது. அவரது நெருக்கடி, தொல்லைகளை மீறி 11 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  சீன ஜனாதிபதி தமிழகத்திற்கு வருவது தமிழகர்களுக்கு பெருமை சேர்க்கும் என்றும் இச்சந்திப்பின் போது இரு நாட்டு தொழில் வர்த்தகம் வளரும் என்று முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

;