மாநிலங்கள்

img

ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 22-ஆம் தேதி சுய ஊரடங்கு பின்பற்றப்பட்டது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டி உள்ளது; பலி எண்ணிக்கை 13 ஆக உள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே மார்ச் 31-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை, தற்போது ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

;