மாநிலங்கள்

img

கோவிட்-19 : தமிழகத்தில் 18,545 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 817 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. 9,909 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

சென்னையில் 12,203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 93 பேர் உயிரிழந்துள்ளனர்; 5,765 பேர் குணமடைந்துள்ளனர்.  அதிகபட்சமாக  ராயபுரத்தில் 2,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 24 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையில் 1,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 11 பேர் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் 1,559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 7 பேர் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 1,317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 12 பேர் உயிரிழந்துள்ளனர். திரு.வி.க.நகரில்  1,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 16 பேர் உயிரிழந்துள்ளனர்.  

;