செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

மாநிலங்கள்

img

கேரள எஸ்.எஸ்.எல்.சி தேர்வு: 98.82 சதவிகிதம் தேர்ச்சி

திருவனந்தபுரம், ஜுன் 30- கேரள எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 இல் 98.82 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 4.2 லட்சம் மாண வர்கள் தோர்வு எழுதினர். இவர்க ளில் 417,101 பேர் உயர்கல்விக்கு தகுதி பெற்றனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.71 அதிகரித்துள்ளது. அனைத்து பாடங்க ளுக்கும் 41906 மாணவர்கள் ஏ பிளஸ் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இது 37,304 ஆக இருந்தது. இந்த ஆண்டு அதைவிட 4572 மாணவர்களுக்கு ஏ பிளஸ் கிடைத் துள்ளது. செவ்வாயன்று தேர்வு முடிவுகளை வெளியிட்ட கல்வி அமைச்சர் டாக்டர். ரவீந்திரநாத் கூறுகையில், கோவிட் அச்சு றுத்தலின் பின்னணியின் மிகுந்து முன்னெச்சரிக்கையுடன் தேர்வு களை நடத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறித்தியதாக குறிப்பிட்டார். கேரளத்தில் தேர்வுகள் நடத்தி உயர்கல்வி க்கு மாணவர்களை தகுதிப்படுத்தியது கோவிட் காலத்தில் உலக அளவில் குறிப்பி டத்தக்க நிகழ்வு என்றார்.

;