திங்கள், ஆகஸ்ட் 3, 2020

மாநிலங்கள்

img

கோவிட் தீவிரத்தை எதிர்கொள்ள கேரளத்தில் ஒருங்கிணைப்புக்கு 14 ஐஏஎஸ் அதிகாரிகள்

திருவனந்தபுரம், ஜூலை 15- கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ள கேர ளத்தில் இம்மாதம் 23 ஆம் தேதிக்குள் 50 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன. பஞ்சாயத்து அளவில் நூறு படுக்கைகளும் மாநகராட்சி, நகராட்சி வார்டுகளில் 50 படுக்கைகள் கொண்ட கோவிட் முதல்நிலை சிகிச்சை மையங் கள் அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட் டத்திலும் இந்த பணிகளை ஒருங்கிணைக்க 14 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள தாக முதல்வர் பினராயி விஜயன் தெரி வித்தார். திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு கே.இன்பசேகரன், கொல்லம்-எஸ்.சித்ரா, பத்தனம்திட்டா-எஸ்.சந்திரசேகரன், ஆலப்புழா- தேஜ் லோஹித் ரெட்டி, கோட்ட யம்-ரேணுராஜ், இடுக்கி-வி.ஆர்.பிரேம் குமார், எர்ணாகுளம்-ஜரோமிக் ஜார்ஜ், திரிச்சூர்-ஜீவன்பாபு, பாலக்காடு-எஸ்.கார்த்திகேயன், மலப்புறம்-என்.எஸ்.கே. உமேஷ், வயநாடு-வீணா மாதவன், கோழிக் கோடு-வி.விக்னேஸ்வரி, கண்ணூர்-வி.ஆர்.கே.தேஜா, காசர்கோடு-அமித் மீனா ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக பொறுப்பு ஏற்றுள்ளனர்.

போர்க்கால அடிப்படையில் முதல்நிலை சிகிச்சை மையம், மறுமுறை கண்காணிப்பு மையம் போன்றவற்றை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் உதவுவார்கள். குறிப்பிட்ட ஒரு பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறி விக்கப்பட்ட உடன் அங்குள்ள நோயாளிக ளை சிகிச்சை மையங்களில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு மாற்று வசதி செய்யப்படும். மையங்களில் கட்டில் மற்றும் தளவாடங்கள் வாங்க முதல்வர் நிவாரண நிதி பயன்படுத்தப்படும். 

மூன்றாவது கட்டத்தில் கேரளம்
நோய் இல்லா நிலை, வெளியிலிருந்து வரும் நோயாளியால் சமூகத்தில் சிலருக்கு நோய் தொற்றுவது (ஸ்பொராடிக்), சில பகுதிகளில் உள்ள மக்களை மையப்படுத்தி கொத்தாக நோய் பரவல் (கிளஸ்டர்) என மூன்று கட்டங்களுக்கு அடுத்தது சமூக பரவல் என உலக சுகாதார நிறுவனம் கண்ட றிந்துள்ளது. கேரளத்தில் தற்போது கிளஸ்டர் கள் சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. மாநிலம் மூன்றாம் கட்டத்தை எட்டியிருப்ப தாகவே புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த கட்டம் சமூக பரவலாகும். இதை தடுப்ப தற்கு கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதற்கு முந்தைய ‘நிபா’ சுமார் ஒரு மாதம் நீடித்தது. நாம் அதை வெற்றி கொண்டோம்.

கோவிட் தடுப்பு நடவடிக்கை கள் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகி விட்டன. உலகத்தின் பல இடங்களில் ஒவ்வொரு நாளும் நோய் அதிகரிக்கிறது. இந்த ஆண்டு இறுதியில்தான் நோய் பரவல் கட்டுப்பாடுக்கு வர வாய்ப்பு உள்ளது. இத்தனை நீண்டகாலம் கடினமாக உழைக்க வேண்டிய சுகாதார ஊழியர்களுக்கு அதனு டன் வரும் சோர்வு உள்ளது. அதுபோல் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பொதுமக்களிடமும் ஏற்பட்டுள்ளது. தொடர்பு வழி நோய் அதிகரிக்க காரணம் நமது அலட்சியமாகும். எனவே மேலும் எச்ச ரிக்கையுடனும் பாதுகாப்பை சோர்வின்றி தொடர வேண்டும் என்றும் கூறினார்.

;