திங்கள், ஆகஸ்ட் 3, 2020

மாநிலங்கள்

கேரளத்தில் ஒரே நாளில் 608 கோவிட் நோயாளிகள் தொடர்பு வழி நோயாளிகள் 396 ஆக அதிகரிப்பு

திருவனந்தபுரம், ஜூலை 15- கேரளத்தில் அச்சமூட்டும் வகை யில் செவ்வாயன்று 608 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களாக நோயாளிகள் எண்ணிக்கை 500 க்குள் இருந்து வந்த நிலையில் ஒரேயடியாக 600 கடந்துள்ளது. தொடர்பு வழியான நோய் தொற்று சுமார் இரண்டு மடங்கு அதிகரித்து 396 ஆக உயர்ந்துள் ளது. செவ்வாயன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கோவிட் ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு செய்தி யாளர்களிடம் மேலும் கூறியதாவது: நோய் தொற்று ஏற்பட்டதில்  130 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 68 பேர் இதர மாநிலங்களில் இருந்தும் கேர ளத்துக்கு வந்தவர்கள். 8 சுகாதா ரத்துறை ஊழியர்களுக்கும், ராணுவ வீரர்களில் பிஎஸ்எப் 1, ஐடிபிபி 2, சிஐஎஸ்எப் 2 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. திருவ னந்தபுரத்தில் மட்டும் நோய் கண்டறி யப்பட்ட 201 நபர்களில் 158 தொடர்பு வழியான தொற்று ஆகும். சவுதி அரேபியாவில் இருந்து வந்த ஆலப் புழாவைச் சேர்ந்த நசீர் உஸ்மான் (47) உயிரிழந்தார். செவ்வாயன்று 720 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டனர். இதுவரை 8930 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. 4454 பேர் சிகிச்சை பெற்று வரு கிறார்கள். செவ்வாயன்று 14,227 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 227 ஆக அதிகரித்துள்ளது என்றார்.

;