மாநிலங்கள்

img

கர்நாடகா: எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து நடவடிக்கை எடுக்க தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு


கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் அளித்துள்ள அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா குறித்து வரும் செவ்வாய் கிழமை வரை முடிவு எடுக்கக் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, மும்பைக்குச் சென்று ஓட்ட லில் தங்கியுள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 10 பேர், தங்களது ராஜினாமா கடிதத்தின் மீது சபாநாயகர் வேண்டுமென்றே முடிவெடுக்காமல் உள்ளதாகக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், 10 எம்எல்ஏக்களும் வியாழனன்று மாலை 6 மணிக்கு சபாநாயகரை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.அவர்கள் ராஜினாமா செய்வது என்று விரும்பினால் மீண்டும் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்குமாறு நீதிபதிகள் அறிவுறுத்தி னர். 10 எம்எல்ஏக்களுக்கும் உரிய பாது காப்பு வழங்குமாறு கர்நாடக டிஜிபிக்கு உத்தரவிட்டனர். சபாநாயகரும் எம்எல்ஏக்களை அனுமதித்து, அவர்கள் கூறுவதை கேட்டு, இன்றே முடிவெடுத்து உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
இதற்கிடையே, கர்நாடக சட்டமன்ற  சபாநாயகர் ரமேஷ் குமார் உச்சநீதிமன்றத் தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், தன்னை உடனடியாக முடிவெடுக்குமாறு, நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்த முடியாது. அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது உடனடியாக முடிவெடுக்க உத்தரவிட்டதை ஒத்திவைக்க வேண்டும். இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கர்நாடக சபாநாயகர் கோரிக்கை விடுத்திருந்தார்.  
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் மனு குறித்த விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா கடிதம் மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால தடை விதித்தது. அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே தொடர செவ்வாய்கிழமை வரை வேண்டும் என கூறி, வழக்கின் விசாரணையை ஜூலை 16 ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

;