மாநிலங்கள்

img

அதிகாரம் யாருக்கும் நிலையானது அல்ல!

பெங்களூரு:
கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ-க்களைவைத்து, பாஜக அரசியல் சதிராட்டம் ஆடி வரும் நிலையில், “அதிகாரம் என்பது யாருக்கும் நிலையானது அல்ல” என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக கர்நாடகசட்டப்பேரவையில் உருக்கமானமுறையில் குமாரசாமி பேசியுள்ளார்.“நான் முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்தே பாஜக ஆட்சிக்கு உரிமை கோரி வருகிறது. அவர்கள் 16 - 17 மாதங்களாக என்னை பதவி விலகுமாறுதான் சொல்கின்றனர். முதல்நாள் தொட்டு அரசைக் கவிழ்க்க முயற் சித்து வருகின்றனர். எடியூரப்பா முதல்வராக இருந்தபோது அவருக்கு ஏற்பட்ட அதே நிலைமையில் நான் இப்போது இருக்கிறேன். ‘அதிகாரம் என்பது நிலையானதல்ல’ என்பதை மட்டும்இந்த நேரத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வெள்ளியன்று காலை, சட்டமன்றத்திற்கு வந்த துணைமுதல்வர் ஜி. பரமேஸ்வரா, அங்கு இரவு முழுவதும் தங்கியிருந்த பாஜக எம்எல்ஏக்களைச் சந்தித்து அவர்களுடன் காலை உணவருந்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு இரவுமுழுவதும் பாஜக எம்எல்ஏக்கள் தர்ணாவில் இருந்தனர். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யவேண்டியது எங்களது பொறுப்பு. அவர்களில் சிலருக்குநீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்ற பிரச்சனைகள் உள்ளன.அதனால் எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்துள்ளோம். அரசியல் கடந்து நாங்கள் நண்பர்கள். அதுதான் ஜனநாயகத்திற்கு அழகு” என்று கூறினார்.

;