மாநிலங்கள்

கர்நாடகாவில் குரங்கு வைரஸ்

பெங்களூரு, பிப்.16- கர்நாடகத்தில் வேகமாக பரவி வரும் குரங்கு வைரஸ் காய்ச்சலால் இதுவரை 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகாவில் மடபூர் கிராமத்தில் இந்த வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. காபி தோட்ட தொழிலாளர்களை பாதிக்கும்  குரங்கு வைரஸ்காய்ச்சல்  5 தொழிலாளர்களுக்கு பரவி உள்ளது என்று மாவட்ட  சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நோய் மத்தியப்பிரதேசம் மற்றும்  அசாம் மாநிலத்திலிருந்து வந்த காபி தோட்டதொழிலாளர்களிடம் இருந்து  பரவியிருக்கலாம் என மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

;