மாநிலங்கள்

img

கர்நாடகா: ஆளில்லா ராணுவ விமானம் விபத்து 

கர்நாடகாவில் ஆளில்லா ராணுவ விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
கர்நாடகாவில் ராணுவத்தைச்சேர்ந்த   ரஸ்டம் 2 என்ற ஆளில்லா விமானம் இன்று வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.  சித்ரதுர்காவில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமான , ரஸ்டம் 2  விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 
 

;