மாநிலங்கள்

img

கர்நாடகா : தலித் எம்.பி. கிராமத்திற்குள் நுழைவதை தடுத்த மக்கள்

கர்நாடகாவில் தலித் சமூகத்தை சேர்ந்த எம்.பி-யை கிராமத்திற்குள் அனுமதிக்காமல் மக்கள் தடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா தொகுதி எம்.பி-யாக இருப்பவர் ஏ.நாராயணசாமி. அவர் தனது தொகுதிக்குட்பட்ட கோலாரஹட்டி கிராமத்திற்கு மக்களை சந்திக்க சென்றுள்ளார். அதுசமயம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எம்.பி நாராயணசாமி தலித் சமூகத்தை சார்ந்தவர் என்பதால் கிராமத்திற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். மேலும் கிராமத்தின் பாரம்பரியப் படி,  பட்டியலினத்தை சேர்ந்த யாரும் நுழைந்ததே கிடையாது என்று மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருப்பி அனுப்பப்பட்ட எம்.பி நாராயணசாமி, இதுகுறித்து விசாரிக்க அம்மாவட்ட எஸ்.பி-க்கு உத்தரவிட்டுள்ளார்.

;