மாநிலங்கள்

தீ பிடிக்கும் அபாயத்தில் தேங்காய் நார்: ஆலைகளை தற்காலிகமாக இயக்க வி.ச. கோரிக்கை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட துணைத்தலைவர் என்.முருகேசன் குமரி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை யை சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கான கதம்பல் தயாரிக்கும் ஆலைகளும் கயிறு திரிக்கும் நிறுவனங்களும் உள்ளன . இந்த ஆலைகளில் உற்பத்தியாகும் கதம்பல் சவுரிகள் மற்றும் தூள் போன்றவற்றை கடற்கரையின் அருகாமையில் உள்ள கிராமங்களில் உலரவிட்டுள்ளனர் . இவற்றில் திடீரென தீ பிடிக்கும் நிகழ்வுகளும் பலமுறை நடந்துள்ளது . தற்போது கடுமையான வெயில் காலம் ஆகும் . எனவே ஏதேனும் வகையில் விபத்து மூலம் தீ பிடித்தால் அந்த கிராமத்துக்கே பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. முதலீட்டாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படும்.தற்போது கெரோனா வைரஸ் பரவுவது காரணமாக ஆலைகள் மூடப்பட்டுள்ள. எனவே இவ்வித சேதத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஆணை பிறப்பித்து மூன்று நாட்கள் ஆலைகள் இயக்க அனுமதிக்குமாறு வேண்டுகிறோம் .
மேலும் மாவட்டம் முழுவதும் வறட்சி ஆரம்பித்துள்ளது . திறந்த கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் குறைந்துவிட்டது. இதனால் குடிநீருக்கும் மக்கள் கைகளை கழுவி சுத்தம் செய்வதற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது . தற்போது பேச்சிப்பாறை அணையில் சுமார் 28 அடி தண்ணீரும் , பெருஞ்சாலையில் 36 அடி தண்ணீரும் மாம்பழத்துறையாறு அணையில் 43 அடி தண்ணீரும் உள்ளது . எனவே மக்கள் தேவையை கணக்கில் எடுத்து குறைந்த அளவு தண்ணீராவது அணைகளிலிருந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

;