மாநிலங்கள்

img

கைகளைத் தானாகவே சுட்டுக் கொள்ளும் பாஜக!

புவனேஸ்வர்:
“நாட்டில் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு நேருதான் காரணம். ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 370-ஐ அறிமுகப்படுத்தி பாவத்தை செய்து விட்டார். தற்போது நேரு செய்த கிரிமினல் தவறுகளை மோடி சரிசெய்துள்ளார்” என்று மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறிஇருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மத்தியப்பிரதேச முன்னாள் முதல் வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான திக்விஜய் சிங்கும், சவுகானை விமர் சித்துள்ளார்.ஒடிசாவில் உள்ள செஹோரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள திக் விஜய் சிங், “நேருவின் கால்தூசுக்கு, சிவ்ராஜ் சிங் சவுகான் சமமானவர் இல்லை” என்று கடுமையான முறையில் சாடியுள்ளார். 
“காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை, பாஜகவினர், அவர்களே அவர்களின் கையைத் தீயில் சுட்டுக் கொண்டு இருக்கிறார் கள் என்பதே உண்மை” என்றும் திக்விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

;