மாநிலங்கள்

img

பாஜக அரசின் வேண்டாத வேலை... ஆங்கிலத்தை தப்பும் தவறுமாக கற்றுத் தந்த ஜெயப்பிரதா

லக்னோ:
உத்தரப்பிரதேச பாஜக அரசானது, ‘பள்ளி செல்வோம்’ என்ற திட்டத்தைஅறிவித்து, அதனை விளம்பரம் வேலைகளில் முக்கியப் பிரபலங்களையும் இறக்கி விட்டுள்ளது.இதனடிப்படையில், பாலிவுட் நடிகையும், பாஜக தலைவர்களில் ஒருவருமான ஜெயப்பிரதாவை, அண்மையில், ராம்பூர் நகரிலுள்ள பள்ளிக்கு, ஆதித்யநாத் அரசு அனுப்பி வைத்துள்ளது.கடந்த மக்களவைத் தேர்தலில், ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த ஜெயப்பிரதாவும், அடுத்த தேர்தலுக்கு உதவும் என்ற வகையில், உற்சாகத்துடன் ராம்பூர் பள்ளிக்குச்சென்றுள்ளார். அத்துடன் சும்மா இல்லாமல், குழந்தைகளுக்கு எப்படி இந்தியும் ஆங்கிலமும் சொல்லித் தருகிறேன்பாருங்கள் என்று ஆசிரியர்களிடம் கூறிவிட்டு, களத்திலும் இறங்கியுள்ளார்.அப்போதுதான் ஆங்கிலத்தைத் தப்பும் தவறுமாக எழுதிப்போட்டு மாட்டிக் கொண்டுள்ளார். இந்தியை சரியாக சொல்லிக் கொடுத்த அவர், ஆங்கிலத்தில் கோட்டை விட்டுள்ளார். ‘இந்தியா எனது நாடு’ என்பதை இப்படித்தான் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றுகூறி, INDIA IS MY CONTRY என்று தவறாக எழுதியுள்ளார். CONTRYஎன்ற வார்த்தையில் ‘U’ என்ற எழுத்தை விட்டுவிட்டார். இது தற்போது வீடியோவாக வெளியாகி கேலிக்கும் கிண்டலுக்கும் உள் ளாகி இருக்கிறது.

;