மாநிலங்கள்

img

உச்சநீதிமன்றமே எங்களுடையதுதான்... உ.பி. பாஜக அமைச்சர் சொல்கிறார்

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலகூட்டுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் முகுத் பிகாரிவர்மா. இவர், செய்தியாளர் களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “ராமர் கோயில்கட்டுவது நம்முடைய (பாஜக) முடிவைப் பொறுத் தது ஆகும். ஏனென்றால், உச்சநீதிமன்றமே நம்முடையதுதான்; சட்டம், நாடு மற்றும் கோயில் ஆகிய அனைத்தும் நம்மிடம்தான் உள் ளது” என்று கூறியுள்ளார். “ஏற்கெனவே ராமர் கோயில்அமைப்பதாகக் கூறி, ஆட்சியைப் பிடித்த பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே தனது பேட்டி சர்ச்சையாவதை உணர்ந்த முகுத் பிகாரி, “நாம் அனைவருமே இந் நாட்டு மக்கள் என்பதால் உச்சநீதிமன்றமும் நம்முடையது என்று கூறினேன்; உச்ச நீதிமன்றம் அரசினுடையது என்று கூறவில்லை” என்று திடீரென பின்வாங்கியுள்ளார்

;