மாநிலங்கள்

img

‘யோகி’யை அவதூறு செய்ததாக 3 நாட்களில் 4 பேர் கைது!

லக்னோ:
உத்தரப்பிரதேசத்தின் சாமியார் முதல்வரான ஆதித்யநாத் பற்றி, அவ தூறு கருத்தை பரப்பியதாக கூறி, 3 பத்திரிகையாளர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஆதித்யநாத் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய தாக, முதன்முதலாக கோரக்பூரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கைபேசியை யும் பறிமுதல் செய்தனர். தற்போது, 3 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களி டம் பேசிய பெண் ஒருவர்,தான் ஆதித்யநாத்தை திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாக கூறியிருந்தார். இந்த வீடியோகாட்சியை தில்லியைச் சேர்ந்த செய்தியாளர் பிரசாந்த் கனோஜியா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இதையடுத்து கனோ ஜியாவிற்கு எதிராக வழக்கு பதிவுசெய்த ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலைய போலீசார், உடனடியாக களத்தில் இறங்கி, தில்லி மேற்கு வினோத் நகரில் வசித்து வந்த கனோஜை அவரது வீட்டிற்கே சென்று கைது செய்தனர்.

அதேபோல, உத்தரப்பிரதேச பெண் பேசும் வீடியோவை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பியதை அடுத்து, அந்த சேனலின் தலைமை யாசிரியர் ஈஷிகா சிங், செய்தி ஆசிரியர் அனுஜ் சுக்லா ஆகியோரையும் உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.இவர்களில், தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவின் கைதை எதிர்த்து, அவரின் மனைவி ஜாகிஷ் அரோரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

;