மாநிலங்கள்

img

ரொட்டியும், உப்பும் சத்துணவாம்... பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில அவலம்

லக்னோ:
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச த்தில், சத்துணவு என்ற பெயரில், மாணவர்களுக்கு ரொட்டியும், உப்பும் வழங்கப்பட்டு வருவது அம்பலமாகி இருக்கிறது.நாடு முழுவதுமுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. 

வறுமையின் காரணமாக பள்ளி இடைநிற்றலைத் தடுக்கவும், வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகுறைபாடு ஏற்படாமல் காக்கவும் தான் பள்ளிகளில் சத்துணவுவழங்கும் திட்டம் கொண்டுவரப் பட்டது. தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் இதில் முன்னோடியாக விளங்குகின்றன.இந்நிலையில்தான், பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில், பள்ளி மாணவ - மாணவியருக்கு, சத்துணவுஎன்ற பெயரில், ரொட்டியும், தொட்டுக்கொள்ள உப்பும் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு உத்தரப்பிரதேசம், மிர்சாபூரில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 100-க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்குதான் மாணவர்களுக்கு ரொட்டியும், உப்பும் மதியவேளை சத்துணவாக வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாணவர்கள் பள்ளியின் தரையில் அமர்ந்து, தங்க ளுக்கு வழங்கப்பட்ட ரொட்டியை, உப்பில் தொட்டு சாப்பிடும் வீடியோ சமூகவலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளது.
மதிய உணவுத் திட்டத்துக்கானஉத்தரப்பிரதேச அரசின் அதி காரபூர்வ இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்குச் சாதம், ரொட்டி, காய்கறிகள், பழங்கள், பால் போன்றவை வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு விட்டு, இவ்வாறு வெறுமனே ரொட்டியும், உப்பும் வழங்கப்பட்டது, கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.இதனிடையே, நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்பட்டதில் மாணவர்களுக்கு ரொட்டி, உப்பு வழங்கப்பட்டது உண்மைதான் என்றும், இதற்காக, பள்ளி ஆசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளரை இடைநீக்கம் செய்திருப்தாகவும், உ.பி. அரசு அதிகாரி அனுரங் படேல் தெரிவித்துள்ளார்.

;