மாநிலங்கள்

img

தொடர்ந்து நடனம் ஆடாததால் பெண் முகத்தில் துப்பாக்கி சூடு -2 பேர் கைது

உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து நடனம் ஆடாததால் பெண் முகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
உத்தரபிரதேச மாநிலத்தில் சித்ரகூட் பகுதியில் திக்ரா கிராமத்தை சேர்ந்த சுதிர்சிங்க என்பவர் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவரது மகள் திருமணத்திற்கு இசை கச்சேரி மற்றும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நடனம் ஆடிய பெண் ஹீனா தேவி சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்.  இதனால் ஆத்திரம் அடைந்த பூல்சிங் என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் ஹீனா தேவியை நோக்கி சுடத்தொடங்கினார். இதைத்தொடர்ந்து சுதிர்சிங்கும் துப்பாக்கியால் சுட்டார். இதில் ஹீனா தேவி முகத்தில் குண்டு பாய்ந்தது. அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிதிலேஷ் கமலேஷ் ஆகிய 2 சிறுவர்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. 
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஹீனா தேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான பஞ்சாயத்து தலைவர் சுதிர்சிங் அவரது உறவினர் பூல்சிங் ஆகியோரை கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். 
 

;