மாநிலங்கள்

ரயிலில் பயணம் செய்தவருக்கு கொரோனா

22 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

நொய்டா, ஜூன் 23- நொய்டாவில் உள்ள பேட்டரி தயாரிக்கும் தொழிற் சாலையில் பணிபுரியும் 48 வயது நபர் ஜூன் 21-ஆம் தேதி காசியாபாத்தில் இருந்து டெஹ்ராடூன் செல்லும் ஜான் சதாப்தி ரயிலில் பயணம் செய்துள்ளார், முன்னதாக அவ ரது ரத்த மாதிரிகளை தொழிற்சாலை நிறுவனம் சோத னைக்கு எடுத்துச் சென்றுள்ளது. முடிவுக்காக காத்திருந்த நிலையில் அவர் ரயில் பயணம் மேற்கொண்டுள்ளார்.  ரயில் பயணத்தில் இருந்த அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து அந்த நபர் ஹரித்வாரில் உள்ள மேளா மருத்துவமனையில் தனி மைப்படுத்தப்பட்டார். அவருடன் பயணித்த 22 பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை ஹரித்வார் தலைமை மருத்துவ அதிகாரி சரோஜ் நைதானி தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக் குமாரும் உறுதிப்படுத்தி யுள்ளார்.

இதற்கிடையில் கொரோனா தொற்று சோதனைக்குள் ளாக்கிக் கொண்ட நபர் முடிவு தெரிவதற்கு முன்பே எப்படி ரயிலில் செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து ரயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
 

;