மாநிலங்கள்

ஆந்திர முன்னாள் முதல்வர் வீட்டுக்காவலில் வைப்பு

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் மற்றும் அவரது மகன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 
ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான  ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின்  ஆட்சி நடைபெற்று வருகிறது. 
ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பால்நாடு உள்ளிட்ட கிராமங்களில் தெலுங்கு தேச கட்சி உறுப்பினர்கள் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வரும்  தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு,  ஆளும் அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டு அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடக்க இருந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை வீட்டு காவலில் வைத்துள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷையும் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். மேலும் பேரணி நடத்த அனுமதியில்லை என்று தெலுங்கு தேசம் கட்சியின் முன்னணி நிர்வாகிகளையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். பல இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

;