மாநிலங்கள்

img

பொறியியல் படிப்பு கல்விக் கட்டணம் இலவசம்

ஹைதராபாத்;
ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து சமூக நல திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்.முதல்வர் பதவியேற்றவுடன் இரண்டாயிரம் ரூபாயாக இருந்த முதியோர் உதவித் தொகையை நான்கு வருடங்களில் நான்கு கட்டங்களில் மூவாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
அவரது தேர்தல் வாக்குறுதியான நவரத்னலு எனும் 9 நலத்திட்டங்களில் ஒன்றான பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1லட்சம் முதல் 1.5 லட்சம் மதிப்பிலான கட்டணம் அரசால் நேரடியாக கல்வி நிலையங்களுக்கு செலுத்தப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

;