மாநிலங்கள்

img

ஆந்திரபிரதேசம் : முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் தற்கொலை

முன்னாள் ஆந்திர மாநில சட்டமன்ற சபாநாயகர் கோடெலா சிவா பிரசாத ராவ் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோடெலா சிவா பிரசாத ராவ் 2014 முதல் 2019 வரை ஆந்திர மாநில சட்டமன்ற சபாநாயகராக பணியாற்றியுள்ளார். மேலும் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் 72 வயதாகிய கோடெலா சிவா பிரசாத ராவ் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோடெலா சிவா மீது, சட்டசபையில் இருந்து 1 கோடி மதிப்புள்ள தளவாடங்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவரது மகன் மற்றும் குடும்பத்தார் மீது பல ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்கொலைக்கான காரணங்களை ஆந்திரா போலீஸார் விசாரித்து வருகின்றனர். கோடெலா மறைவிற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
 

;