மாநிலங்கள்

img

அபிஜித் பானர்ஜியின் சாதனையை வரவேற்கத் தயங்கும் சங்கிகள்

கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் விமர்சனம்

திருவனந்தபுரம், அக்.15- தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 80களில் பிறந்த அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு பெற்றுள்ளார். வளர்ச்சிக்கான குஜராத் மாதிரி ஓட்டையானது என கூறியுள்ள நிலையில் அவரது சாதனையை இந்தி யாவின் ஆட்சியாளர்கள் எப்படி வரவேற்கப் போகி றார்கள் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக கேரள நிதி அமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் தெரி வித்துள்ளார்.  முகநூலில் இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள் ளதாவது: 

இம்முறை நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டுஃப்லோ மற்றும் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. அமர்த்தியா சென்னுக்குப் பிறகு மீண்டும் ஒரு இந்தியர் பொருளாதார அறிவியலுக்காக நோபல் பரிசு பெறுவது இந்திய மக்களுக்கு பெருமை. இந்திய ஆட்சியாளர்கள் இதனை எவ்வாறு வரவேற்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். பிரதமர் வரவேற்று டுவீட் செய்துள்ளார். மிகவும் நல்லது.    இந்திய ஆட்சியாளர்களின் எதிர்வினையைக் காண ஆர்வமாக இருப்பதற்கான காரணங்கள் இவையே. அபிஜித் பானர்ஜி சங்கிகள் சீரழிக்க முயலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) எண்பதுகளில் விளைந்தவர். 

ஜேஎன்யு, 81-83 காலகட்டத்தில் போராட்ட முனை யில் நின்றது. மாணவர்கள் ஒட்டுமொத்தமாக கைது செய்யப்பட்ட போது அதைத் தடுக்க அபிஜித் பானர்ஜி அங்கு சென்றார். திகார் சிறையில் அவர்களுடன் அடைக்கப்பட்டார். சில தினங்களுக்கு பிறகே சுமார் 400 மாணவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. ஒன்றை தெளிவுபடுத்துகிறேன். அவர் எந்த ஒரு இடதுசாரி மாணவர் அமைப்பின்  உறுப்பினரும் அல்ல. முழு மையான ஒரு தாராளவாதியாக இருந்தார். இன்றைய ஆட்சியாளர்களுக்கு தாராளவாதிகள் பிடித்தமா னவர்களாயிற்றே.  ஆனால் பாஜகவின் பல கொள்கைகளையும் அவர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். தி வயரில் வந்த அவரது பேட்டி பிரபலமானது. அதில் அவர் வெளிப் படையாக கூறியது, ‘பணமதிப்பு நீக்க உத்தி என்ன என்பது எனக்கு புரியவில்லை’ என்பதாகும். ஜிஎஸ்டி செயல்படுத்திய முறையை அவர் ‘மிகவும் அருமை’ என பாராட்டினார். குஜராத் மாதிரியிலான வளர்ச்சி  மோசமானது எனவும் அவர் விமர்சித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்காக வருவாய் பரிமாற்ற திட்டம் உருவாக்க உதவினார். இதெல்லாம் அரசியல். 

அவருக்கு நோபல் பரிசு கிடைக்க உதவிய சித்தாந்தம் எது? வறுமை ஒழிப்பு திட்டங்களை உரு வாக்குவதற்கான  Randomise Control Trial  முறையை பயன்படுத்தியதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. இந்த அணுகுமுறை குறித்த ஆவணமே அவரும் அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோவும் இணைந்து  எழுதிய Poor Economics - A radical thinking of the way to fight global Poverty என்கிற புத்தகமாகும்.  வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால் வறுமையை குறைப்பதற்கான திட்டங்களை இறக்குமதி செய்ய வேண்டியதில்லை. பல்வேறு திட்டங்கள் மூலம் வறியவர்களின் எதிர்வினையை அறிவியல்பூர்வமாக புரிந்துகொண்டு அவற்றை தேர்வு செய்யவும் விரிவுபடுத்தவும் வேண்டும் என்பதுதான். 

பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கியவர்களை அவர்களது குழந்தைகளுக்கான கல்வி மூலம் உயர்த்த என்ன தேவை? இத்தகைய பரிசோதனைகளை அறிவியல்பூர்வமாக பல்வேறு இடங் களில் நடத்தி சிறந்ததை கண்டுபிடிக்க வேண்டும்.இத்த கைய பரிசோதனைகள் நடத்த உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான வல்லுநர்கள் உதவுகிறார்கள்.   இந்தியாவில் ஜெய்ப்பூரில் நடக்கும் இது தொடர்பான ஒரு பரிசோதனை குறித்து பொருளா தார வல்லுநர் கீதா கோபிநாத், ஒரு தில்லி பயணத்தின் போது விவரித்ததை நான் நினைவு கூருகிறேன். இன்று உலகத்தில் ஏராளமாக உள்ள வல்லுநர்களை ஊக்கு விக்கவும், அவர்களுக்கு உதவும் கல்வி ரீதியான தலை யீடுகள் போதுமானவை அல்ல. தில்லியில் கல்வி சோத னைகளில் அவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டுவீட் செய்துள்ளார். ஆனால், இந்த அணுகுமுறையை கடுமையாக விமர்சிப்பவர்களும் உள்ளனர்.  கேரளத்தை எடுத்துக்கொண்டால் இந்தியாவில் வறுமை மிக குறைவான மாநிலமாகும். அதன் அணுகு முறைகள் சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வடிவம் பெற்றது அனைவருக்கும் தெரியும். கேரளம் பின்பற்றுகிற சமூக கோட்பாட்டை அபிஜித்தின் புதிய சித்தாந்தம் போதுமான அளவு கவனத்தில் கொள்ள வில்லை என்பது முக்கிய விமர்சனம்.

;