மருத்துவம்

img

செவிக்குள் வினோத ஒலிகள்! (டனைத்தஸ் – tinnitus)

லட்சக்கணக்கானோர் பங்கேற்பு  

தமிழிலும்  மந்திரம்  ஓதினர்

தஞ்சாவூர், பிப். 5 - தஞ்சாவூர் பெரிய கோயிலில் 23 ஆண்டு களுக்கு பிறகு குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக் கானோர் பங்கேற்றனர். உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள், பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய தொல்லியல் துறையினர், கோயி லில் கேரளாந்தகன் நுழைவு வாயில், ராஜ ராஜன் நுழைவு வாயில், மராட்டா நுழைவு வாயில் ஆகியவற்றில் திருப்பணி செய்தனர். இதையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன் குடமுழுக்கு விழாவை பிப்.5 ஆம்  தேதி நடத்திட முடிவு செய்தனர்.இதனைத் தொடர்ந்து கடந்த டிச.2ஆம் தேதி திருப்பணி களுக்கான பாலாலயம் செய்யப்பட்டது. அதன்படி விநாயகர், சுப்பிரமணியர், கருவூரார், சண்டிகேஸ்வரர், நடராஜர், அம்மன், வராகி ஆகிய சன்னதிகளில் திருப்பணிகள் நடைபெற்றது. 

பின்னர் ஜன.5 ஆம் தேதி கோயில் விமான கோபுர கலசம் கீழே இறக்கப்பட்டு அவை தங்க  முலாம் பூசப்பட்டு மீண்டும் கடந்த 30-ஆம் தேதி கோபுரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட் டது. அதே போல் கொடி மரமும் 17 ஆண்டு களுக்கு பழைய கொடிமரம் மாற்றப்பட்டு,  புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.பின்னர், குடமுழுக்கு விழா கடந்த 27-ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கி, 31ஆம் தேதி வெண்ணாற்றிலிருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.  இதையடுத்து கடந்த 1ஆம் தேதி மாலை முதலாம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து புதன்கிழமை காலை வரை எட்டு கால யாகசாலை பூஜை கள் நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு எட்டா வது கால யாகசாலை பூஜைகள் நடை பெற்றது. பின்னர் காலை 7.20 மணிக்கு யாக சாலை மண்டபத்தில் இருந்து மங்கள வாத்தியம், சிவவாத்திய கருவிகள் இசைக்க கங்கை, யமுனை, காவிரி உள்ளிட்ட புனித  நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடை பெற்றது. முதலில் விநாயகர் சன்னதிக்கு கடம் புறப்பட்டு சென்றது, பின்னர் தொடர்ந்து, 27 கோயில் கோபுரகலசங்களுக்கும் கடம் புறப்பட்டு கோயிலை வலம் வந்தது. ஓவ்வொரு சன்னதியாக சென்று அதன் கலசங்களுக்கு சிவாச்சாரி யார்கள் வழிபாடு சென்றனர்.216 அடி உயர முள்ள விமான கோபுர கலசத்துக்கு 5 சிவாச்சாரி யார்கள், 2 ஓதுவார்கள் மற்றும் கோயில் பணி யாளர்கள் 8 நிமிடங்களில் கோபுரத்தின் உச்சிக்கு ஏறினர். 

கோயில் கோபுரத்தில் சிவாச்சாரியார்கள் சமஸ்கிருதத்திலும், ஓதுவார்கள் தமிழிலும் மந்திரங்களை உச்சரித்தனர். அதே நேரத்தில் நடராஜர் மண்டபத்திலும் ஓதுவார்களும், சிவாச்சாரியார்களும் இரு மொழியிலும் மாறி மாறி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தனர்.  பின்னர் சரியாக காலை 9.23 மணிக்குவிமான கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது பச்சைகொடி அசைக்கப்பட்டதும் இதர கோபுரங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீபாரா தனை நடைபெற்றது. பின்னர் கோயிலில் வடக்கு புறத்தில் இருந்த விவிஐபிக்கள் கோயில் கருவறைக்குள் அனுமதிக்கப்பட்டு பெருவுடையாரை தரிசனம் செய்த பின்னர், விஐபிக்கள், பொதுவழி பக்தர்களை தரிசன த்துக்காக அனுமதித்தனர். புதன்கிழமை காலை 10 மணியிலிருந்து தொடர்ந்துஇரவு வரை இடைவிடாது மூலவரான பெருவுடையாரை பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்

பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை யொட்டி கோயிலுக்குள் செவ்வாய்க்கிழமை இரவே சிலர் திருச்சுற்று மாளிகையில் தங்கினர். பின்னர் புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல்  பக்தர்கள் வருகை தந்தனர். பொது தரிசனத்துக்காக கோயிலின் தென்புறத்தில் 7 அடைப்புகள் அடைக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும்  நிரம்பியதும். பொதுமக்களை கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அனு மதித்தனர்.  அங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததும், காலை 7 மணிக்கு பிறகு  பொதுதரிசனத்துக்கு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து கோயிலைச் சுற்றி இரும்பு  தடுப்புகள் அமைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர். 

பொதுமக்கள் சாலையிலிருந்து குட முழுக்கு காண்பதற்காக இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் வெளியில் இருந்தபடியே குடமுழுக்கை கண்டு களித்தனர். குடமுழுக்கு நடைபெற்றதும் கோயி லுக்குள் சென்று தரிசனம் செய்ய பல்லாயிரக் கணக்கானோர் வெயிலையும் பொருட்படுத்தா மல் பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் என கோயில் அருகே உள்ள  சாலைகளில் காத்திருந்தனர். இவர்களை காவல்துறையினர் முறைப்படுத்தி அனுப்பி வைத்தனர்.  அவ்வப்போது  தடுப்புகளை மீறி இளை ஞர்கள் கோயிலுக்குள் சென்றனர். பொது வழியில் தரிசனம் செய்தவர்கள் வேறு வழியாக வெளியேற்றப்பட்டனர்.

விஐபிக்கள் தரிசனம் செய்ய கோயிலின் தென்புறத்தில் 5 தடுப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டிருந்தது, காலை 5 மணி முதல் பக்தர்களும், பொதுமக்களும் வந்தனர்.  ஒவ்வொரு தடுப்பு அரண்களும் நிரம்பி யதும், அடுத்தடுத்த தடுப்புகளில் அவர்களை அடைத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்படா மல், சிரமம் இன்றி குடமுழுக்குவிழாவை கண்டு களித்தனர். அதே போல் விவிஐபிக்கள் தரிசனம் செய்ய கோயிலின் வடக்குப் பகுதி ஒதுக்கப் பட்டிருந்தது. அவர்கள் சிவகங்கை பூங்கா வழியாக உள்ளே வந்து, தரிசனம் செய்து விட்டு மேற்கு வாயில் வழியாக வெளியேறினர். முன்னதாக கடந்த மூன்று மாத காலமாக அனைத்து முன்னேற்பாடு பணிகளும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், குடமுழுக்கு  விழா குழு சார்பிலும் சிறந்த முறையில், அனைத்து துறை அதிகாரிகள் ஒத்துழைப் போடு செய்யப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,  மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்தராவ், அரசு  உயர் அலுவலர்கள், காவல்துறை உயர் அலு வலர்கள், துரை.திருஞானம் தலைமையிலான திருக்கோயில் திருப்பணிகள் குழுவினர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான  பொது மக்கள் மற்றும் பக்தர்கள் குடமுழுக்கு விழாவில்  பங்கேற்ற னர்.

(ந.நி)
 

 

;