மருத்துவம்

img

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் என்ன செய்யவேண்டும்

டாக்டர் சந்தீப் அட்டாவர் விளக்கம்

சென்னை, மார்ச் 31- கோவிட் 19 தொற்று நோயில் இருந்து உறுப்பு மாற்று  அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் எப்படி நடந்து  கொள்ளவேண்டும் என்பதை சென்னை பெரும்பாக்கம கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவ மனையின் திட்ட இயக்குனரும், இதயம் மற்றும் நுரையீரல்  மாற்றுத் திட்ட தலைவருமான டாக்டர் சந்தீப் அட்டாவர் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு இந்த கொரோனா  தொற்று ஏற்பட்டால் அதில் இருந்து மீண்டுவிடலாம். அதே சமயம், பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தொற்று காரணமாக மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள். உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் சரியாக இல்லாத பட்சத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படா மல் இருக்க நீங்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.  குறிப்பாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.  கோவிட் - 19  யாரையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக இருப்பது மிக அவசியமாகும். கேள்விகளும் பதில்களும் வருமாறு:

எனது உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை தள்ளி வைக்கலாமா?

கண்டிப்பாக செய்ய வேண்டிய மாற்று அறுவை சிகிச்சையாக இருந்தால், அதை தாமதப்படுத்தக்கூடாது. இருப்பினும், உங்களுக்கு உடல் உறுப்பு தானம் செய்யும்  நபருக்கு கொரோனோ வைரஸ் அல்லது வேறு எந்த நோய்  தொற்றும் இல்லை என்பதை உங்கள் மருத்துவர்கள் உறுதி  செய்ய வேண்டும். அவர்களுக்கு இதுபோன்ற ஏதாவது பாதிப்பு இருக்கும்பட்சத்தில், உங்கள் மருத்துவர்கள் அந்த  நன்கொடையாளரிடம் இருந்து உறுப்பு தானத்தை பெறக்கூடாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள்  வேறொரு உடல் உறுப்பு தானம் வழங்கும் ஆரோக்கியமான  நபரை கண்டுபிடிக்கும் வரை உங்கள் அறுவை சிகிச்சையை மறுபரிசீலனை செய்யலாம்.

 பயணங்களில் ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளதா?

கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான பகுதி களில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற நேரங்க ளில் பயணம் செய்வது என்பது மிகவும் ஆபத்தானதாகும். உங்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு, அது உங்களுக்கு தெரியாமல் உங்களைச் சுற்றி உள்ள பலருக்கும் அதை பரப்பலாம். முடிந்த அளவு பயணத்தை தவிர்க்கவும்,

எனது குடும்ப உறுப்பினர், சக ஊழியருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து  கொண்டவராக இருந்தால், அவர்களுடன் தொடர்பு கொள்  வதை தவிர்க்கவும். நீங்கள் உடனடியாக இது குறித்து உங்கள் மருத்துவரிடம் தெரிவித்து உங்களுக்கு ஏதேனும்  அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

மருத்துவர்களை சந்திப்பதற்காக மருத்துவமனை களுக்கு செல்வது பாதுகாப்பானதா?

இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் வைரஸ் தொற்று பாதிப்பு என்பது தற்போது மிகக் குறைவு. தேவை யில்லாமல் ஆபத்தில் மாட்டிக்கொள்வது என்பது புத்தி சாலிதனமானது அல்ல. முக்கியம் இல்லாதபட்சத்தில் மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். முடிந்தால் உங்கள் மருத்துவரை வீடியோ கால் மூலம் அழைத்து ஆலோசனை பெறவும்.

எனது நன்கொடையாளருக்கு கோவிட் - 19 வைரஸ் தொற்று இருந்தால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா?

இதில் ஆபத்து என்பது குறைவு, ஆனால் இல்லாமல்  இல்லை. மருத்துவர்கள் உடல் உறுப்பு நன்கொடை அளிப்ப வரை நன்கு பரிசோதிக்க வேண்டும். ஏதேனும் பாதிப்பை  ஏற்படுத்தும் அறிகுறிகள் தென்பட்டால் அதை தவிர்க்க வேண்டும். நன்கொடையாளர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் உடல் உறுப்பு தானம் செய்வதை 14 முதல் 28 நாட்களுக்கு தள்ளி வைக்க  வேண்டும்.

நோய்த் தொற்று அபாயங்களை தவிர்க்க நான் என்ன  செய்ய வேண்டும்?

உலக சுகாதார மையம் மற்றும் அரசு கூறியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உங்கள் கைகளை சானிடைசர் கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும். நீங்கள் இருமும்போதும், தும்மும்  போதும் உங்கள் முகத்தை துணியால் மூடிக் கொள்ளுங்கள்.  உங்கள் கண், மூக்கு வாயை தொடாதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

;