பொருளாதாரம்

img

7 நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.1 லட்சம் கோடி இழப்பு

மும்பை:
கடந்த வாரத்தில், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 2.95 சதவிகிதம் (1,149.26 புள்ளிகள்) சரிவைச் சந்தித்தது. தேசியப் பங்குச் சந்தைக் குறியீடான ‘நிப்டி’யும் 2.93 சதவிகிதம் (337.65 புள்ளிகள்) இறக்கம் கண்டது.இதன் காரணமாக, 7 முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒட்டுமொத்தமாக, 1 லட்சம் கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் மதிப்பு 22 ஆயிரத்து 866 கோடியே 93 லட்சம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 67 ஆயிரத்து 265 கோடியே 32 லட்சம் ரூபாயாக இறங்கியுள்ளது. கொடாக் மகேந்திரா வங்கியின் மதிப்பு 15 ஆயிரத்து 624 கோடியே 6 லட்சம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 98 ஆயிரத்து 413 கோடியே 27 லட்சம் ரூபாயாக இறங்கியுள்ளது.இதேபோல, ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன மதிப்பு 14 ஆயிரத்து 287 கோடியே 76 லட்சம் ரூபாய் சரிந்து 4 லட்சத்து 20 ஆயிரத்து 774 கோடியே 52 லட்சம் ரூபாய்க்கு வந்துள்ளது. எச்டிஎப்சி 10 ஆயிரத்து 178 கோடியே 84 லட்சம் ரூபாயைத் தொலைத்து 3 லட்சத்து 41 ஆயிரத்து 349 கோடியே 33 லட்சம் ரூபாய்க்கு வந்துள்ளது. பஜாஜ் பைனான்ஸ் 9 ஆயிரத்து 437 கோடியே 91 லட்சம் ரூபாயும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 824 கோடியே 8 லட்சம் ரூபாயும் இழப்புக்கு உள்ளாகி, முறையே 2 லட்சத்து 26 ஆயிரத்து 309 கோடியே 37 லட்சம் ரூபாய் மற்றும் 8 லட்சத்து 28 ஆயிரத்து 808 கோடியே 67 லட்சம் ரூபாய்க்கு சறுக்கியுள்ளன.இந்நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது.

;