பொருளாதாரம்

முறைகேட்டிற்கு வழிவகுக்கும் முத்ரா கடன் திட்டம் ஐ.வி.நாகராஜன்

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சிக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் (Micro Units Development and Refinance Agency -MUDRA) மூலமாக செயல்படுத்தப்படு கிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமா கும், இது அனைத்து வங்கிகளின் மூலமே செயல்படுத்தப்படுகிறது.  இது முற்றிலும் குறுந்தொழில் மேம் பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். இதை நிதி அமைச்சர் 2015-16 நிதியாண்டில் வெளியிட்டார். தனியார் குறுந்தொழில் நிறுவனங்க ளுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும். 2015-16 நிதி யாண்டில் சுமார் ரூ.1.5 கோடி வரை பல்வேறு நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் கடன் வழங்கியுள்ளனர். குறிப்பாக சிறுவியாபாரிகள் சாமானி யர்களை தொழில் முனைவோர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதுதான் இந்த கடன் திட்டம். இது பிரதமர் மோடியின் பிரதான திட்டங்களில் முக்கியமான ஒன்றாகும். முத்ரா கடன் திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் வரை எந்த பிணையமும் இல்லாமல் கடன் வழங்கப்படும். சிசு, கிஷோர், தருண் என 3 விதமாக முத்ரா கடன் வழங்கப்படுகிறது. 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன் சிசு என்றும், 50 ஆயிரத்தில் இருந்து 5 லட்சம் வரையிலான கடன் கிஷோர் என்றும் 5 லட்சத்துக்கு மேல் 10 லட்சம் ரூபாய் வரை யிலான கடன் தருண் என்றும் அழைக்கப் படுகிறது. இந்த திட்டத்தில் பண்ணை தொழில் சார்ந்த மாட்டுப்பண்ணை, கோழிப் பண்ணை, விவசாயம் காளான் வளர்ப்பு போன்ற தொழில்களுக்கு கடன் கிடை யாது. ஏற்கனவே முதலீடு செய்து நடத்தும் தொழில்களுக்கும் கடன் தருவதற்கு வங்கிகள் முன்வருவதில்லை. அந்த தொழிலை விரிவுபடுத்துவதற்கும் அல்லது வியாபாரத்திற்கு தேவையான சரக்கு களை வாங்குவதற்கு மட்டும் கடன் வழங்கு வதற்கு வாய்ப்புள்ளது. ஆனாலும் அந்த கடன் பணமாக கிடைக்காது.  பொருள், இயந்திரம், உபகரணப் பொருட்கள், சரக்குவண்டி என அனைத் திற்கும் அதன் விற்பனையாளரின் விலைப்  பட்டியல் (Quatation) கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் கடன் கிடைக்கும். சரியான தொழில் கடன் தேவையை நீங்கள் நிரூபிக்கும் பட்சத்தில் கடன் வழங்க வங்கி மேலாளர் இறுதி முடிவு எடுப்பார். சொந்தச் செலவு, வீட்டுச் செலவு, திருமணச் செலவு போன்ற வற்றிற்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்க வாய்ப்பில்லை. கல்விக்கடன், தனிநபர் கடன், தனிநபர் வாகனக்கடன் போன்றவை கள் இதில் வராது. இந்நிலையில் மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் புதிய ஆட்சியில் முத்ரா கடன் திட்டத்தை இன்னும் எளிமையாக்கி அதிகமானோரை கடன்பெற வைப்பதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும், அதற்கான தீவிர ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும் செய்தி கள் வந்துகொண்டுள்ளன. இன்னொருபுறம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முத்ரா கடன் திட்டத்தில் முறைகேடுகளும் வராக் கடனும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. இந்த குற்றச்சாட்டு இப்போது எழுந்ததல்ல. தேர்தலுக்கு முன்பிருந்தே இந்த குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக 10 லட்சம் ரூபாய் வரை பிணையம் இல்லாமல் வங்கி அதிகாரி களே வேண்டியவர்கள் பெயரில் கடன் வாங்கிவிட்டு முதல் ஒரு ஆண்டு வரை தவணை முறையாக திருப்பி செலுத்தி விடுவார்கள். அதன் பிறகு தவணை செலுத்தாமல் தொழில் நஷ்டத்தில் இயங்கு வதாக கூறி கடனை வராக்கடனாக்கி விடுவார்கள். இதனால் கடன் வாங்கிய வரும், கடன் கொடுத்த வங்கி அதிகாரியும் சட்டத்தின் பிடியில்  சிக்க முடியாது. இந்த வழிமுறையில் வங்கி அதிகாரிகள் முத்ரா கடனில் ஏராளமான மோசடியில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது. இப்போதும் முத்ரா கடனில் 70 சதவீத கடன்கள், குடும்பத் தலைவிகள் பெயரில் வழங்கப்பட்டவைதான். அவற்றில் 99 சதவீத கடன் 50 ஆயிரம் ரூபாய்க்கு சிசு வரம்புக்குள் வரும் கடன்கள்தான். இந்த கடனை வாங்கும் குடும்பத் தலைவிகள் முறையாக கடனை திருப்பிச் செலுத்தி விடுகின்றனர். வராக்கடனும் முறை கேடும் நடப்பது, 10 லட்சம் ரூபாய் வரை என்ற பெரிய கடன்களில்தான். அதுவும் வராக்கடன் மொத்தமே 2017-18 நிதி யாண்டில் 2.52 சதவீதம் 2018-19 நிதி யாண்டில் 2.68 சதவீதம் மட்டும்தான். ஆக முத்ரா கடன் திட்டத்தில் முறைகேடு என்பது சாமானியர்களால் நடத்தப்படு வதல்ல. வங்கி அதிகாரிகள் துணையுடன் செல்வாக்கு பெற்றவர்களால் நடத்தப்படு வதாகும். இது இப்படியே தொடர்ந்தால் முத்ரா  கடன் திட்டம் முறைகேடான திட்டமாக மாறிவிடும். அதற்கு முன்னதாக முத்ரா கடன் திட்டத்தை எளிமையாக்குவதற்கும் முறை யாகச் செயல்படுவதற்கும் எந்தவித முறைகேடுகளுக்கும் வாய்ப்பளிக்காமல், இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக நடைமுறையில் உள்ள முறைகேடு களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

;