பொருளாதாரம்

img

மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றும் மாநில பட்ஜெட்

சென்னை,பிப்.14- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் மாநிலத் தலைவர் பா. ஜான்சி ராணி, பொதுச் செய லாளர் எஸ். நம்புராஜன் ஆகி யோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- மத்திய அரசின் நிதிநிலை  அறிக்கையைப்  போன்றே,  தமிழக நிதிநிலை அறிக்கை யும் மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றுவதாகவே உள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நலன்களை, சட்ட உரிமை கள் அடிப்படையில் பாது காப்பது என்பது மாநில அர சின் வரம்புக் குரிய கடமையா கும். அதை நிலைநாட்டுவ தற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை அளிப்பதாக இல்லை. கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைவிட சற்று கூடுதலாக ரூ.667 கோடி என ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளபோதும், விலைவாசி உயர்வு, பண வீக்கம் இவற்றுடன் பொருத் திப் பார்க்கையில், இந்த உயர்வு எந்த விதத்திலும் போதுமானதல்ல. குறிப்  பாக, அனைத்து இடங்களி லும் ஏற்கத்தக்க பல்நோக்கு  அடையாள சான்று, தமிழ கத்தில் இன்னும் 5 விழுக்காடு மாற்றுத்திறனாளிகளுக் குக்கூட தரப்படவில்லை என அறியப்படுகிறது. 

ஆதார் மற்றும் வாக்கா  ளர் அடையாள சான்று  வழங்குவதைப் போன்று,  வீட்டுக்கு வீடு மாற்றுத்திற னாளிகளை கணக்கெடுத்து, கிராம ஊராட்சி மற்றும் நகர வார்டுகளில் முகாம்கள் நடத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்துள்ள போதும் நிதிநிலை அறிக்கை யில் கண்டுகொள்ள வில்லை. அரசுத்துறைகளில் உள்ள மாற்றுத்திறனாளி களுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை கண்டறிந்து மூன்று மாத  காலத்திற்குள் நிரப்ப வேண்டுமென உச்சநீதிமன் றம் 2013 ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. அந்த உத்த ரவை காலில் போட்டு மிதிக்கும் வகையில் நடந்து கொண்ட அதிமுக அரசு, சிறப்பு நடவடிக்கை மூலம் 4  விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளிப்போம் என்பதெல்லாம் கண்துடைப்பே. தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்ற கோரிக்கை யையும் அதிமுக அரசு கண்டு கொள்ளவில்லை. கடந்த நிதியாண்டில் மாற்றுத்திறனாளி களுக்கென ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதி ரூ.10 கோடி பயன்  படுத்தாமலே மாற்றுத்திற னாளிகள் நலத்துறை திருப்பி  அனுப்பியதும்,  3000 சிறப்பு  சக்கர நாற்காலிகள்  வழங்கப் படுமென அறிவித்து இது வரையிலும் நடைமுறைக்கு வராததும் வெட்கக்கேடான வைகளாகும்.  மொத்தத்தில் மத்திய அரசைப் போன்றே மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றுவதாக மாநில அரசின் பட்ஜெட்  அமைந் துள்ளது. இவ்வாறு தெரிவித்தி ருக்கிறார்கள்.

;