பொருளாதாரம்

img

பொருளாதார ஆய்வறிக்கை 2019 - கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

இந்தியாவில் 2019 நிதியாண்டின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், இன்று காலை 11 மணி அளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்  பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியாவில் ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யப்படும். இந்நிலையில், இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், பொருளாதார ஆய்வறிக்கையை இன்று காலை சமர்ப்பித்தார். 

அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள், நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 7 சதவிகிதம் வளர்ச்சியை மையமாக கொண்டுள்ளதாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை அடுத்து, 2019 நிதியாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 5.8 சதவிகிதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2018-ஆம் நிதியாண்டில் 6.4 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு முதலீட்டு விகிதம் குறைந்துள்ளதால் முதலீட்டை அதிகரிக்கும் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது. 

2025ஆம் நிதி ஆண்டுக்குள் இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற, ஆண்டுக்கு 8 சதவீதம் வளர்ச்சியை அடைய வேண்டும் எனவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2020 நிதி ஆண்டில் எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்ப்பதால் அதன் நுகர்வு அதிகரிக்கக்கூடும் என்றும், அந்நிய நேரடி முதலீடு குறித்த அரசின் கொள்கைகள் மேலும் தளர்வடையக்கூடும் என்றும், மெதுவான வளர்ச்சி, ஜிஎஸ்டி வசூல் மற்றும் விவசாயத் திட்டங்கள் ஆகியவற்றில் அரசு சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்றும், உலக நாடுகளின் வளர்ச்சியில் மெதுவாக இருப்பதும் வர்த்தக உறவுகளில் உறுதியற்ற தன்மையும் ஏற்றுமதியைப் பாதிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

;