திங்கள், ஆகஸ்ட் 3, 2020

பொருளாதாரம்

img

100 ஆண்டில் இல்லாத பொருளாதார பாதிப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு

புதுதில்லி, ஜூலை 11- கொரோனா தொற்று நெருக் கடியால் 100 ஆண்டுகளில் இல் லாத பொருளாதார பாதிப்பு ஏற் பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பர வலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ளது. இதனால் தொழில், வரு மானமின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தில்லியில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கி யின் பொருளாதார மாநாட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பேசுகையில், கொரோனா தொற்று  சுகாதாரம், பொருளாதா ரம், மக்களின் நல்வாழ்வு, வேலை வாய்ப்பு போன்றவற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத தாக் கத்தினையும் எதிர்மறையான மாற்றத்தினையும் ஏற்படுத்தி யுள்ளது. நாட்டின் பொருளாதா ரம் மற்றும் நிதி அமைப்பிற்கு பின் னடைவை ஏற்படுத்தியுள்ளது. தளர்வுகளுக்கு பிறகு பொருளா தாரம் இயல்பு நிலைக்கு திரும்பு வதற்கான குறியீடுகளை வெளிப் படுத்துகிறது என்று தெரிவித்தார்.

;