பொருளாதாரம்

img

கொரோனா பெருந்தொற்றுக்கிடையே கலால் வரியை உயர்த்தி மோடி அரசு அட்டூழியம்

கொரோனா பெருந்தொற்றுக்கிடையே, பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு மீண்டும் சிறப்பு காலால் வரியை உயர்த்துகிறது. இதன் மூலம் டீசல் மற்றும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 12 முதல் 18 வரை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் நாடே நிலைகுலைத்து நிற்கிறது. எந்த தொழிலும் நடைபெறவில்லை. மக்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் மத்திய மோடி அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீது கூடுதல் சிறப்பு கலால்வரியை உயர்த்தியிருக்கிறது. இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மார்ச் 14, 2020 அன்று தான் மோடி அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை 3 ரூபாய் உயர்த்தியது. அப்போதே மக்கள் கையில் வாங்கும் சக்தி குறைந்திருக்கும் நிலையில் இப்படி கூடுதல் வரி விதிப்பது. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாவர்கள் என கடும் விமர்சனம் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் தற்போது மத்திய அரசு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி வரம்பை (Special Additional Excise Duty Cap) உயர்த்திகிறது.

இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய அரசு 10 ரூபாயை சிறப்பு கூடுதல் கலால் வரியாக விதிக்கலாம். இந்த வரம்பை மீறி தற்போது 18 ரூபாயாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசலில் மத்திய அரசு 4 ரூபாயை சிறப்பு கூடுதல் கலால் வரியாக விதிக்கலாம். தற்போது இந்த வரம்பை மீறி 12 ரூபாயாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு மத்தியில், இந்த வரி வரம்பு உயர்வு மக்கள் தலையில் பேரிடியாக வந்து விழுந்து இருக்கிறது.

கொரோனா ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவால் சாதாரண பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மேலும் விலையை பன்மடங்கும் உயர்த்தும். ஏற்கனவே வேலையின்றி வீட்டில் இருக்கும் மக்கள் எப்படி அத்தியாவசதிய பொருட்களை வாங்குவது. இந்த நடவடிக்கை சாதாரண மக்களுக்கு கொரோனா வைரஸ்சை விட கொடியதாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

source : https://www.business-standard.com/article/economy-policy/centre-to-hike-excise-duty-on-petrol-and-diesel-by-rs-8-per-litre-each-120032400102_1.html

;