பொருளாதாரம்

img

புதுவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தும் மத்திய அரசு

புதுச்சேரி, ஆக. 14- பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு காலம்கடத்துவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். இதுகுறித்து முதல்வர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: பிரதமர், நிதி அமைச்சர், நிதிக்குழு தலை வர் ஆகியோரை சந்தித்து 15ஆவது நிதிக்குழு வில் புதுவையை இணைக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தேன். அதற்கு இதுவரை  எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் யூனி யன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஜம்மு  காஷ்மீரை மட்டும் நிதிக்குழுவில் இணைத் துள்ளனர். சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேச மான புதுச்சேரிக்கு  அனைத்து அதிகாரமும் கொடுக்கப்பட்டிருந்தாலும், துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டால் ஒவ்வொரு முறையும் திட்டங்களை போராடிப்பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாநில பட்ஜெட் குறித்து அமைச்சரவையிலும், மாநில திட்டக்குழுவிலும் முடிவெடுக்கப் பட்டு, மத்திய அரசின்  ஒப்புதலுக்கு அனுப்பி  வைக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்ச கத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, அது நிதி அமைச்சகத்தில் இருக்கிறது. மாநி லம் என்றால் மாநில அரசே பட்ஜெட்டை முடிவு செய்து அதனை தாக்கல் செய்ய முடியும்.

ஆனால் பாஜக கூட்டணியில்  இருப்ப வர்களே விவரம் தெரியாமல் பட்ஜெட் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை என்று எங்களை  குறை கூறுகிறார்கள். மத்திய அரசு ஒப்புதல் கொடுக்காமல் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட முடியாது. அதனால்தான் காலதாம தமே தவிர எங்களால் கிடையாது.  பட்ஜெட் ஒப்புதல் தொடர்பாக மத்திய  அமைச்சரிடமும், உள்துறை இணைச் செய லாளரிடமும் 3 முறை தொலைபேசியில் பேசியுள்ளேன். மத்திய நிதி அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தவர் பா.சிதம்பரம். அவர் தமிழகத்திற்கு பல  திட்டங்களை கொண்டு வந்தவர். அவரைப் பற்றி தமிழக முதல்வர் விமர்சித்துள்ளார். மற்ற  தலைவர்களை விமர்சனம் செய்யும் போது  யோசித்து விமர்ச்சிக்க வேண்டும். தமிழ கத்தில் என்ன நடக்கிறது என்பது அனை வருக்கும் தெரியும். எனவே, தமிழக முதல்வர்  மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியிருப்பது, அந்த மாநில மக்களின் அதிகாரத்தை பறிக்கும் செயல். எனவே அந்த மாநிலத்தில் தேர்தல் நடத்தி புதிதாக அமையவுள்ள அரசு 370ஆவது பிரிவை நீக்க வேண்டுமா என முடிவெடுக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

;