பொருளாதாரம்

img

பொருளாதார மந்த நிலையால் வரி வருவாயும் குறைந்தது!

புதுதில்லி:
2018-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2019-இல் அனைத்து விதமான வரிகள் மூலம் வரும் வருவாய் கணிசமாக குறைந்து இருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளன.சென்ற ஆண்டில் 11.7 சதவிகிதமாக இருந்த மொத்த மத்திய வரிகள் வளர்ச்சி, நடப்பு காலாண்டில் 6.6 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று கணக்குகள் கட்டுப்பாட்டு அதிகாரி (Controller General of Accounts - CGA) கூறியுள்ளார்.நேரடி வரி வருவாய் வளர்ச்சி 6.7 சதவிகிதம் முதல் 5.8 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. மறைமுக வரி வருவாய் வளர்ச்சி 16.1 சதவிகிதம் முதல் 7.3 சதவிகிதம் வரைகுறைந்துள்ளது. வருமான வரி மூலமான வருவாயும் 11.3 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக குறைந்துள்ளது. பொருளாதார மந்தநிலை, ஜிஎஸ்டி, குறுகிய வரிஅடிப்படை மற்றும் குறைந்த வரி மிதப்பு (Low Tax Bouoyancy) அம்சங்களே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது வரி வருவாய் வளர்ச்சிதற் போது குறைந்திருப்பதற்கு காரணம் என்று கூறப் படுகிறது.அதேநேரம் நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், பெருநிறுவன வரி வருவாய் 5.5 சதவிகிதமாக வளர்ச்சி அடைந்துள் ளது. சென்ற நிதியாண்டில் இது 0.6 சதவிகிதமாக இருந்துள்ளது.

;