பொருளாதாரம்

img

பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் இணைப்பு ஊழியர்கள் வரவேற்பு

23.10.2019 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்களின் புத்தாக்கத்திற்கான முன்மொழிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  பத்திரிகையாளர் சந்திப்பில், அதனை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அறிவித்தார். பத்திரிகையாளர்கள் மத்தியில் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் விவரிக்கும் போது, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் இந்திய தேசத்தின் சொத்துக்கள் என்றும், அவற்றை மூடிவிடவோ, பங்குகளை விற்க வோ அல்லது மூன்றாவது நபரிடம் தாரை வார்க் கப்படுவதோ நடக்காது என தெரிவித்தார்.  இயற்கை பேரிடர் காலங்களில் எல்லாம், பிஎஸ்என்எல் நிறுவனம் தான் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் சேவையை கொடுத்தது என்பதை அவர் மிகச்சரியாக உயர் நிலைப் படுத்தி தெரிவித்தார். பாதுகாப்பு படைகளுக் கான தொலைத் தொடர்பு சேவைகளை கட்டிய மைத்து, பராமரிப்பதில் பிஎஸ்என்எல்லின் முக்கியத்துவத்தையும், அவர் அடிக்கோடிட்டு தெரிவித்தார்.  பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவ னங்களுக்கு 4ஜி அலைக்கற்றையை நிர்வாக ஒதுக்கீட்டின் மூலம் வழங்குவது என்று அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அதற்காக இந்த இரண்டு பொதுத்துறைகளிலும், தனது முதலீட்டை அதிகரித்துக் கொள்ளும். கடந்த சில வருடங்களாகவே, பிஎஸ்என்எல்-லில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (AUAB), அரசு பிஎஸ்என்எல்க்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதை நாம் நினைவுபடுத்த விரும்பு கிறோம். பிஎஸ்என்எல்க்கு சமதளம் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து பிஎஸ்என்எல் லில் உள்ள அதிகாரிகளும், ஊழியர்களும், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதோடு, அதன் காரணமாக பழிவாங்குத லுக்கும் உள்ளாக்கப்பட்டனர். ஊழியர்களின் இந்த கோரிக்கையை, மத்திய அமைச்சரவை யில் சிறப்பாக முன் வைத்து, அதற்கு ஒப்புதலை யும் பெற்றுத் தந்த மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம் தனது நன்றியினை உரித் தாக்கிக் கொள்கிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனையினை நிகழ்த்தியதற்காக அனைத்து ஊழியர்களையும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் இந்த சமயத்தில் வாழ்த்துகி றது. பிஎஸ்என்எல்க்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பேரா தரவு கொடுத்த பொது மக்களுக்கும் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.  பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் இதர பல அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி பிஎஸ்என்எல்-லில் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை முடி வெடுத்துள்ளது. அதிகப்படியான ஊழியர்கள்  காரணமாகத்தான் பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டமடைந்தது என்கிற வாதம் சரியானதல்ல என பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சுட்டிக் காட்ட விரும்புகிறது. தற்போது உள்ளதை விட ஒரு லட்சம் ஊழியர்கள் அதிகமாக இருந்த போதே, இந்த நிறுவனம் 2004-05ஆம் ஆண்டு களில் 10,000 கோடி ரூபாய்களை நிகர லாபமாக பெற்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை. மேலும் தனியார் நிறுவனங்கள் தங்களது வரு வாயில் 5%ஐ மட்டுமே ஊழியர்களுக்கு ஊதிய மாக வழங்கும் போது பிஎஸ்என்எல் நிறுவனம் 70%ஐ வழங்குகிறது எனக் கூறுவதும் ஒரு நியா யமான ஒப்பீடாக இல்லை. தனியார் நிறுவ னங்கள், தங்களின் பல பணிகளை அயல் பணிக்கு விட்டு விடுவதால், அந்த செலவுகள், சம்பளப் பட்டியலில் வருவதில்லை. ஆனால், பிஎஸ்என்எல்லில் பெரும்பாலான பணிகளை  ஒப்பந்த ஊழியர்கள் உட்பட, தங்களின் சொந்த ஊழியர்களை வைத்தே செய்யப்படுகிறது.  விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலமாக பெரும் பாலான ஊழியர்களை வேலையை விட்டு விரட்டுவதற்குப் பதிலாக, இந்த விருப்ப ஓய்வு திட்டத்திற்காக செலவு செய்ய உத்தே சிக்கப்பட்டுள்ள பணத்தை பிஎஸ்என்எல்-லின் வலைத்தளங்களை மேம்படுத்தவும், விரிவு படுத்தவும் செலவு செய்வது மிகப் பொருத்த மாக இருக்கும். அது நிறுவனத்தின் புத்தாக்கத் திற்கு கண்டிப்பாகப் பயன் தரும். ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58ஆக குறைக்கும் முன்மொழிவையும் அரசு வைத் துள்ளது என தெரிய வருகிறது. அனைத்து ஊழி யர்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் இந்த விஷயத்தை கடுமையாக எதிர்க்கின்றன. இது போன்ற விஷயங்களை அரசாங்கம் எடுக்கக் கூடாது என பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.  கடன்களை திருப்பிக் கட்டவும், தனது வலைத்தளங்களை விரிவுபடுத்தவும் தேவை யான நிதியினை உருவாக்க பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் வெளியிட உள்ள 15,000 கோடி ரூபாய்களுக்கான பத்தி ரங்களுக்கு அரசின் SOUVERIGN GUARANTEE வழங்கப்படும் என்ற முடிவையும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வரவேற்கிறது. பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய இரண்டு நிறுவ னங்களையும் இணைப்பது என்பதையும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல்-லின் துணை நிறுவனமாக எம்டிஎன்எல் செயல்படும். இதற்காக எம்டிஎன்எல் பங்கு சந்தையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் என்ற முடிவையும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வரவேற்கிறது. அதே சமயம் எம்டிஎன்எல் இணைத்துக் கொள்வதற்கு முன், அந்த நிறுவனம், கடன் இல்லா நிறுவனமாக மாற்றித் தர வேண்டும் என பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.  அடுத்த நான்கு ஆண்டுகளில், 38,000 கோடி ரூபாய்கள் அளவிற்கு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றின் நிலங்க ளை பணமாக்குவதற்கும், அமைச்சரவை ஒப்பு தல் வழங்கியுள்ளது. அவ்வாறு உருவாக்கப் படும் நிதியினை, வலைத்தள விரிவாக்கத் திற்கும், உயர் நிலைப்படுத்தவும் பயன்படுத்த வேண்டும். ஆனால் அதே சமயத்தில், இந்த முன்மொழியப்பட்டுள்ள பணமாக்கல் நடவடிக்கைகளின் காரணமாக பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல், நிறுவனங்களின் நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கு தாரை வார்க்கப்படக் கூடாது எனவும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது. 

;