பொருளாதாரம்

img

அடுத்த பட்ஜெட்டுக்கு தயாராகிறார் நிர்மலா சீதாராமன்

புதுதில்லி, அக். 6 - அடுத்த நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயார் செய்வதற்காக இம்மாதம் 14ஆம் தேதி தொடங்கி ஆலோச னைக் கூட்டங்களை நடத்த மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் முதல் வேலை நாளில் 2020 - 2021 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தக வல்கள் தெரிவிக்கின்றன.  இந்த நிதிநிலை அறிக்கையை தயார் செய்வதற்கான முன்னேற் பாடுகள் குறித்து அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பொருளாதார விவ காரங்கள் துறை சார்பில் சுற்ற றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவு மற்றும் வருவாய் வசூலில் உள்ள சிக்கல்கள் குறித்த தேவையான விவரங்களுடன் நிதி ஆலோசகர்கள் பங்கேற்க வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியின மக்களுக்கான துணைத் திட்டங்கள், குழந்தைகளுக்கான திட்டங்கள் தொடர்பான விவரங் களும் புதிதாக கேட்கப்பட்டுள் ளன. இந்த விவரங்கள் அனை த்தும் கொடுக்கப்பட்ட பின்னர் அனைத்துத் துறை செயலர்கள் மற்றும் நிதி ஆலோசகர்களுடன் நிதி அமைச்சக செயலாளர் ஆலோசித்த பிறகு நிதி நிலை அறிக்கை இறுதி செய்யப்பட உள்ளது. 

;