பொருளாதாரம்

img

கட்டுமான நிறுவனங்களுக்கு தேசிய நுகர்வோர் ஆணையம் எச்சரிக்கை

புதுதில்லி, ஆக.4- உறுதியளித்த காலத்திற் குள் வீடுகளை கட்டித் தராமல், முன்பணம் செலுத்தியவர்களி டம் வீடுகளை வாங்கித் தான் ஆக வேண்டும் என்று எந்த வொரு கட்டுமான நிறுவனமும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது. தில்லியை தலைமையிட மாகக் கொண்டு இயங்கும், பயோனியர் யுஎல் & ஐ என்ற கட்டுமான நிறுவனம், குரு கிராம் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வரு கிறது. இங்கு, குடியிருப்பு ஒன்றை வாங்குவதற்கு ஒரு வர், 2012 ஆம் ஆண்டு முன் பணம் செலுத்தியுள்ளார். ஒப்பந்தப்படி 2015ஆம் ஆண்டே வீட்டை ஒப்படைத்தி ருக்க வேண்டிய நிலையில், உறுதிமொழி அளித்தபடி நிறைவேற்றவில்லை. இதை யடுத்து குடியிருப்பு வாங்க முன் பணம் செலுத்தியவர், கடந்தாண்டு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு அளித்தார்.

தமக்கு வீடு வேண்டாம் என்றபோதிலும், அதனை வாங்கியே ஆக வேண்டும் என்று கட்டுமான நிறுவனம் கட்டாயப்படுத்து வதாக தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.கே.ஜெயின், குறிப் பிட்ட காலத்திற்குள் வீடுகளை கட்டித்தராமல், அந்த வீடு களை வாங்கியே ஆகவேண் டும் என கட்டுமான நிறுவனங் கள் கட்டாயப்படுத்த முடி யாது. குடியேறுவதற்கான சான்றிதழை கட்டுமான நிறு வனம் பெற்றாலும், இரண் டரை ஆண்டுகள் தாமதப் படுத்திவிட்டு, வீட்டை வாங்க வேண்டும் என முன்பணம் செலுத்தியவரை கட்டுமான நிறுவனம், சட்டரீதியாக கூட கட்டாயப்படுத்த முடியாது. மேலும், வீடு வாங்க முன்பணம் செலுத்தியவரிடம், ஆண்டுக்கு 10.65 சதவீதம் என்ற விகிதப்படி வட்டியைக் கணக் கிட்டு, 4 கோடியே 43 லட்ச ரூபாயை பயோனியர் கட்டு மான நிறுவனம் திருப்பித்தர வேண்டும் என்று தேசிய நுகர் வோர் குறைதீர் ஆணைய நீதி பதி வி.கே.ஜெயின் அதிரடி யாக உத்தரவிட்டுள்ளார்.

;