பொருளாதாரம்

img

அசோக் லேலண்ட் நிறுவனத்தில் 16 நாட்கள் உற்பத்தி நிறுத்தம்

சென்னை எண்ணூரில் செயல் பட்டுவரும் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் 16 நாட்கள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. அதே போல் ஒசூரில் உள்ள நிறுவனத்தில் 5 நாட்கள் உற்பத்தி நிறுத்தம்  செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு 7.5 சதவீதம் ஆகும். ஆனால் மோடி அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற தவறான பொருளாதாரக் கொள்கையால்தான் ஆட்டோமொபைல் துறை mதற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகி உள்ளது. 
இந்நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனம் தமிழகத்தில் உள்ள எண்ணூர் மற்றும் ஒசூர் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. சென்னை எண்ணூரில் செயல் பட்டுவரும்  தொழிற்சாலையில் 16 நாட்கள் வாகன உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.  அதே போல் ஒசூரில் உள்ள நிறுவனத்தில் 5 நாட்கள் வாகன உற்பத்தி நிறுத்தம்  செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதனால் அந்நிறுவனங்களில் பணியில் உள்ள ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 
ராஜஸ்தான், பந்த்ரா, மும்பை உள்ளிட்ட பகுதிகளிலும் உற்பத்தியை நிறுவத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
அசோக் லேலண்ட் நிறுவனம் ஏற்கனேவே கடந்த 5ம் தேதி முதல் 9 -ஆம் தேதி வரை தொழிலாளர்களுக்கு  கட்டாய விடுப்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

;