பொருளாதாரம்

img

தங்கம் விலை மீண்டும் ரூ.504 உயர்வு

சென்னையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.504 உயர்ந்து 26,232 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. அதனடிப்படையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.504 அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத்தங்கம், 26,232 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோல் ஒரு கிராம் 63 ரூபாய் உயர்ந்து 3,279 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,510, சவரனுக்கு ரூ.28,080 மற்றும் 10 கிராமுக்கு ரூ.34,370 ஆக உள்ளது. 

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.40.70க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.40,580க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 300ரூபாய் உயர்ந்து 40,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

;