பொருளாதாரம்

img

புதிய உச்சத்தில் தங்கம் விலை

 சென்னை, செப்.3- தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து பல்வேறு புதிய உச்சங்களையும் எட்டி விற்பனையானது. விலையேற்றத்துக்கு தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு, அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப்போர் உள்ளிட்டவை காரணமாக கூறப்பட்டன. அந்தவகையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 216 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 832 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 27 ரூபாய் உயர்ந்து மூவாயிரத்து 729 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 52 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனை  செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 600 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

;