பொருளாதாரம்

img

விண்ணை முட்டும் தங்கம் விலை!

சென்னை, ஆக. 7 - சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,544 ஆக உயர்ந்துள்ளது.  செவ்வாயன்று இதன் விலை ரூ.3,473 ஆக இருந்தது. 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 28,000 ரூபாயைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ரூ.27,784லிருந்து புதனன்று ரூ.28,352 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தங்கம் விலை 568 ரூபாய் அதிகரித்துள்ளது.  அதேபோல, ஒரு கிராம் (24 கேரட்) தூய தங்கத்தின் விலை ரூ.3,701 ஆக உள்ளது.

நேற்றைய தினத்தில் இதன் விலை ரூ.3,630 ஆக மட்டுமே இருந்தது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.29,040லிருந்து ரூ.29,608 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 25,000 ரூபாயைத் தாண்டியது. பின்னர் ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயைத் தாண்டிய தங்கம் விலை, இந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் 27,000 ரூபாய்க்கு விற்பனையானது.  வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், செவ்வாயன்று ரூ.45.70 ஆக இருந்த ஒரு கிராம் வெள்ளி புதனன்று ரூ.46.80க்கு விற்பனையாகிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை 45,700 ரூபாயிலிருந்து 46,800 ரூபாயாக அதிகரித்துள்ளது. மற்ற நகரங்களில் தங்கம் விலையைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,385 ஆகவும்,  பெங்களூருவில் ரூ.3,390 ஆகவும், ஹைதராபாத் தில் ரூ.3,460 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,386 ஆகவும் இருக்கிறது.

;