பொருளாதாரம்

img

புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை

சென்னை, ஆக.12- தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை, திங்களன்று மீண்டும் சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தங்கம் விலை தொடர்ந்து அதி கரித்து பல புதிய உச்சங்களை எட்டி வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 28 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபர ணத் தங்கம் 21 ரூபாய் அதிகரித்து, மூவாயிரத்து 603 ரூபாய்க்கு விற்ப னையாகிறது. ஆபரணத்தங்க விற்பனை வரலாற்றில் இவ்வளவு அதிக விலைக்கு தங்கம் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்துள் ளது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம், 47 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 300 ரூபாய் அதிகரித்து 47 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு கிறது.

;