பொருளாதாரம்

img

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை

சென்னை, ஆக.10- கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்துள்ளது.  ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சங்களை எட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 28 ஆயிரத்து 656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 13 ரூபாய் அதிகரித்து, மூவாயிரத்து 582 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  அதே சமயம் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 47 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 47 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

;