பொருளாதாரம்

img

சென்செக்ஸ் 4 ஆயிரம் புள்ளிகள் சரிந்தது

பலத்த அடியால் நிறுத்தப்பட்ட பங்குச் சந்தை வர்த்தகம்!

மும்பை, மார்ச் 23- மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் திங்க ளன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 934 புள்ளிகளை இழந்து, பலத்த அடியைச் சந்தித்துள்ளது.  கடந்த வெள்ளிக்கிழமை யன்று வர்த்தகம் முடிந்தபோது, சென்செக்ஸ் 29 ஆயிரத்து 915 புள்ளிகளில் முடிவடைந்து இருந் தது. ஆனால், திங்கட்கிழமை அது 25 ஆயிரத்து 981 புள்ளி களுக்கு சரிந்தது. வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்திலேயே, 9.77 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சி அடைந்த பங்கு வர்த்தகம், வர்த்தக நேர முடிவில் 13.15 சதவிகித வீழ்ச்சி யைச் சந்தித்தது. 

இதேபோல தேசியப் பங்குச் சந்தையான நிப்டியும் 12.98 சத விகிதம் சரிந்தது. கடந்த வெள் ளிக்கிழமையன்று வர்த்தக வார முடிவில், 8,745 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந் தது. ஆனால், திங்களன்று காலை எடுத்த எடுப்பிலேயே சுமார் 300 புள்ளிகள் சரிந்து, வர்த்தக நேர முடிவில் மேலும் 835 புள்ளிகளை பறிகொடுத்து, 7 ஆயிரத்து 610 புள்ளிகளுக்கு வீழ்ச்சி அடைந்தது. வர்த்தக வாரத்தின் முதல் நாளிலேயே பங்குகள் கடுமை யான இறக்கம் கண்டதால், முத லீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சிய டைந்தனர். மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டிலும் வர்த்தகம் சிறிது நேரத்திற்கு நிறுத்தப்பட்டது. எனினும் பெரிய மாற்றம் எது வும் இல்லை. ஒரே மாதத்தில், இரண்டாவது முறையாக திங்க ளன்று பங்குச் சந்தைகள் மூடப் பட்டன.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

பங்குச் சந்தைகள் சரிவால், டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் 76 ரூபாய் 92 காசுகளாக வீழ்ச்சி அடைந் துள்ளது. முன்னதாக டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 75 ரூபாய் 19 காசுகளாக இருந்த நிலையில், திங்கட்கிழ மையன்று ஒரே நாளில் 1.73 காசு கள் வரை குறைந்துள்ளது.
 

;