பொருளாதாரம்

img

கேஸ் விலை, சுங்கக் கட்டணம் உயர்வு

உங்கள் வீடுகளில் மெல்ல நுழைகிறது தேசிய பொருளாதார நெருக்கடி

புதுதில்லி/சென்னை, செப்.2- சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் காரணமாக  விமான எரிபொருளின் விலை ஒரு சதவீதம் குறைந்தும், அதன் பலன் மக்களுக்குப் போய் சேரவிடாமல் செய்கிறது மோடி அரசு. மானியமில்லா வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ரூ.15.50 பைசா உயர்த்தியும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. விமானங்களுக்குப் பயன்படும் எரிபொருள் விலை லிட்டருக்கு ஒரு  சதவீதம் அதாவது ரூ.596.62 பைசா  குறைக்கப்பட்டு, கிலோ லிட்டர் ரூ.62,698.86 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து 3-வது மாதமாக  விமான எரிபொருள் விலை குறைக்கப் பட்டுள்ளது. சந்தையில் விற்பனை செய்யப்படும் மானியமில்லாத 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு விலை  ஒன்றுக்கு ரூ.15.50 பைசா உயர்த்தப் பட்டுள்ளது. இதனால், சந்தையில் ரூ.574.50 பைசாவுக்கு விற்பனையான சிலிண்டர் இனி ரூ.590 ஆக விலை உயர்த்தப்படுகிறது. மேலும், கிராமங்களில் மானிய விலையில், ரேசன் கடைகளில் சாமானிய மக்களுக்கு விற்பனை செய்யப்படும் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 25 காசுகள் விலை உயர்த்தப்பட்டுள் ளது. கடந்த ஜூலை மாதம் முதல்  மாதந்தோறும் 25 பைசா உயர்த்தப்பட்டு வருகிறது. மானியம் மூலம் ஏற்படும் ‘இழப்பை’ ஈடுகட்டும்வரை தொடர்ந்து 25 பைசா உயர்த்தப்பட்டு வருகிறது. சந்தையில் மானியமில்லாத மண்ணெண்ணெய் விலை லிட்டர் ரூ.66.58 ஆக இருக்கிறது.

சுங்கச் சாவடிகளில்  கட்டணம் உயர்வு

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் - மதுரை செல்லும் சாலையில் கொடை ரோடு உள்ளிட்ட என்.எச். 7 சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாக னங்களுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைரோடு சுங்கச்சாவடியில் கார், வேன், ஜீப்புகளுக்கு ஒருமுறை  செல்ல கட்டண உயர்வு இல்லை. அதே கட்டணமாக ரூ.60 வசூலிக்கப்படுகிறது. பலமுறை செல்வதற்கு ரூ.85 வசூ லிக்கப்பட்டது. தற்போது ரூ.5  உயர்த்தப்பட்டு ரூ.90 வசூலிக்கப்படு கிறது.  சரக்கு ஏற்றி வரும் இலகு ரக  வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல  ரூ.100 வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.105 வசூலிக்கப் படுகிறது. 

பலமுறை செல்ல ரூ.150 வசூலிக்கப் பட்டு வந்தது. தற்போது ரூ.5  உயர்த்தப்பட்டு ரூ.155 ஆக வசூ லிக்கப்படுகிறது. 4 சக்கர வாகனங் களாக லாரி, பேருந்துகளுக்கு ஒரு முறை செல்ல ரூ.200 வசூலிக்கப் பட்டு வந்தது. ரூ.10 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.210 ஆக வசூலிக்கப் படுகிறது. பலமுறை செல்ல ரூ.305 வசூ லிக்கப்பட்டது. தற்போது ரூ.5 உயர்த்தப் பட்டு ரூ.310 வசூலிக்கப்படுகிறது.  கனரக வாகனங்கள் ஒருமுறை செல்ல ரூ.325 வசூலிக்கப்பட்டது. ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.335 வசூலிக்கப் படுகிறது.  பலமுறை செல்ல ரூ.485 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.15 உயர்த்தி ரூ.500 ஆக வசூலிக்கப்  படுகிறது. மேலும் கார் வேன் ஜீப்பு களுக்கு மாத கட்டணமாக ரூ.1785-ம், இலகு ரக வாகனங்களுக்கு ரூ.3125-ம், லாரி பேருந்களுக்கு ரூ.6250-ம், கனரக வாகனங்களுக்கு ரூ.10,045-ம், வசூலிக்கப்படுகிறது.  பொதுவாக செப்டம்பர் மாதத்தில் இந்த கட்டண உயர்வை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் அமலாக்கி வருகின்றனர். (நநி)
 


 

;